ரோமானிய கொன்கிரீட் கலவை கண்டுபிடிப்பு | தினகரன்

ரோமானிய கொன்கிரீட் கலவை கண்டுபிடிப்பு

பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் ரோமானிய காலத்து கொன்கிரீட் கட்டுமானத்தின் இரசாயன கட்டமைப்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பண்டைய கடல் சுவர்களை கட்ட ரோமானியர்கள் கற்களுடன் சுண்ணாம்பு, எரிமலை சாம்பலை கலந்து கொன்கிரீட்களை அமைத்துள்ளனர். எரிமலை பொருட்கள் கடல் நீரில் வலுவான மற்றும் நிலையாக செயலாற்றக்கூடியது என்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புகள் சுற்றுச்சூழலுக்கு சாதகமான கட்டுமானங்களை அமைக்க உதவும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

காலப்போக்கில் அழிவடையும் நவீன கொன்கிரீட் கலவையை போலல்லாமல் ரோமானிய காலத்து கலவை நீண்ட காலம் நிலைத்திருப்பது ஆய்வாளர்களிடையே மர்மமாக இருந்து வந்தது. பண்டைய ரோமானிய கடல் சுவர்கள் மற்றும் துறைமுகங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு ஆய்வு செய்தபோது அதில் அலுமினிய தெபோர்மரியேட் என்ற அரிதான ஒரு கனிமம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

இது சுண்ணாம்புக் கலவையுடன் படிகமாக்கப்படுவதாக நம்பும் ஆய்வாளர்கள் இந்த கலவை கடல் நீர் வெளிப்படும்போது வெப்பமேற்றப்படுகிறது.


Add new comment

Or log in with...