அமெரிக்கத் தூதரகத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அச்சுறுத்தல் | தினகரன்

அமெரிக்கத் தூதரகத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அச்சுறுத்தல்

ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் பணிப்பு

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்ஸினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான செய்தி குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

கேள்வி நேரத்தில் முஜிபுர் ரஹ்மான்எம்.பி எழுப்பிய மேலதிக கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர், இவ்வாறு கூறினார்.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதன் உண்மை நிலை பற்றி விளக்குமாறு அவர் பிரதமரிடம் கேட்டிருந்தார். குறித்த செய்தியை அமெரிக்கத் தூதரகம் மறுத்துள்ளபோதும், இதுபற்றி விசாரணை நடத்தப்படுமா? என அவர் வினவியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், உண்மையில் இது தொடர்பில் செய்தி வெளியாகியிருந்தது. எனினும், தூதரகம் இதனை நிராகரித்திருந்ததுடன், அவ்வாறான முயற்சியொன்று தொடர்பில் உண்மையில் தகவல்கள் ஏதும் குறித்த ஊடகத்திடமிருந்தால் அதனைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

Or log in with...