Friday, March 29, 2024
Home » வளர்ப்பு நாயை இருவர் உரிமை கோருவதால் DNA பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு

வளர்ப்பு நாயை இருவர் உரிமை கோருவதால் DNA பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு

by gayan
October 12, 2023 8:04 am 0 comment

பொமனேரியன் ரக வளர்ப்பு நாயொன்றுக்காக இரண்டு தரப்பினர் உரிமைகோரும் நிலையில் அந்த வளர்ப்பு நாயின் DNA பரிசோதனை மேற்கொண்டு அந்த அறிக்ைகயை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி மஜிஸ்திரேட் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் பிரதேசத்திலுள்ள நபரொருவர் அதுதொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில் தமது வளர்ப்பு நாய் காணாமற் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தநிலையில் சில தினங்களுக்குப் பின்னர், அவரது வீட்டிற்கு அந்த வளர்ப்பு நாய் வந்துள்ள நிலையில் மறுதினம் கிளிநொச்சியிலுள்ள மற்றுமொரு நபர் தமது வளர்ப்பு நாய் வேறொருவரினால் பலவந்தமாக பெற்றுக்ெகாள்ளப்பட்டு கட்டிவைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.

அதனையடுத்து பொலிஸார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளபோதும் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டிற்கு வரவில்லை. அதனால் வளர்ப்பு நாய் தொடர்பான சிக்கலை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல பொலிஸார் செயற்பட்டுள்ளனர்.

அங்கு வளர்ப்புநாயின் முதலாவது உரிமையாளரான நபர் தாம் வளர்க்கும் நாயின் தாய் கிளிநொச்சியில் வெறு ஒரு இடத்திலிருப்பதாகவும் அந்த வீட்டிலிருந்தே தாம் குறித்த வளர்ப்பு நாயை விலைக்கு கொள்வனவு செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், வளர்ப்பு நாயின் உண்மையான உரிமையாளரை இனங்காணும் வகையில் அந்த வளர்ப்பு நாயின் TNA பரிசோதனையை மேற்கொண்டு அந்த அறிக்ைகயை கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT