Friday, March 29, 2024
Home » நௌபர் மௌலவி உட்பட 24 பேருக்கு எதிரான விசாரணைகள் நேற்று ஆரம்பம்

நௌபர் மௌலவி உட்பட 24 பேருக்கு எதிரான விசாரணைகள் நேற்று ஆரம்பம்

மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணை

by gayan
October 12, 2023 6:20 am 0 comment

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றசாட்டின் பேரில், நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மாஅதிபர் தாக்கல் செய்த வழக்கின் சாட்சி விசாரணைகள் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று ஆரம்பமானது. அமல் ரணராஜா, நவரத்ன மாரசிங்க, தமித் தொட்டவத்த ஆகியோர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையிலேயே

இந்த சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்படி வழக்கு விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்னர் நேற்றைய தினம் அது தொடர்பில் கருத்து தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்ரியா ஜயசுந்தர:

2019 ஏப்ரல் 21 இல்,இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வழக்கின் 17ஆவது பிரதிவாதி மரணமடைந்து விட்டதாகவும் அதற்கிணங்க மேலும் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்: ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதே இவ்வழக்கின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

(லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT