இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர் கப்பல்கள் | தினகரன்

இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர் கப்பல்கள்

 இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர் கப்பல்கள் வந்து சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய கப்பற்படை வட்டாரங்கள் கூறியதாவது: இந்திய கடற்படைக்கு சொந்தமான செயற்கைகோள் ருக்மிணி, போர்க்கப்பல் கப்பற்படை விமானம் ஆகியவை கடந்த 2 மாதத்தில் மட்டும் 13 சீன போர்க்கப்பல்கள் கண்டறிந்துள்ளன.

கராச்சியில் பணி முடித்த யுவான் கிளாஸ் கன்வென்சனல் என்ற சீன நீர்மூழ்கி கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில் உலா வந்துள்ளது. தொடர்ந்து சோங்மிங்டோ என்ற கப்பலும் ஊடுருவியது. கடந்த ஏப்ரல் முதல் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர் கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில் ஊடுருவுவது இது 7 வது முறையாகும்.

அடுத்த வாரம் வங்கக் கடல் பகுதியில், இந்தியா - ஜப்பான் - அமெரிக்க நாடுகள் கடற்படைகள் பயிற்சி மேறகொள்ள உள்ளன. இதனை கண்காணிக்கும் வகையில், சீன உளவு கப்பலான ஹைவிங்ஷிங் என்ற கப்பலும் கடந்த வாரம் இந்திய பெருங்கடல் பகுதியில் ஊடுருவியது.

பிஜிபவுட்டி பகுதியில் சீனா இராணுவம் வேகமாக இராணுவ தளம் அமைத்து வருவதால், இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல்கள் அதிகளவில் ஊடுருவுகின்றன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 


Add new comment

Or log in with...