இரண்டாவது போட்டியில் இலங்கை, சிம்பாப்வேயை வீழ்த்தியது | தினகரன்

இரண்டாவது போட்டியில் இலங்கை, சிம்பாப்வேயை வீழ்த்தியது

 
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில், இலங்கை அணி 119 பந்துகள் மீதமிருக்க, 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
 
காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில்...
 
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
 
சிம்பாப்வே 
155/10 (33.4 ஓவர்கள்)
ஹமில்டன் மசகட்ஷா 41
மெல்கம் வொல்லர் 38
 
லக்‌ஷான் சந்தகன் 4/52 (10 ஓவர்கள்)
வனிது ஹசரங்க 3/15 (2.4 ஓவர்கள்)
 
இலங்கை
158/3 (30.1 ஓவர்கள்)
உபுல் தரங்க 75*
நிரோசன் திக்வெல்ல 35
 

 

 

வனிது ஹசரங்க

வனிது ஹசரங்க

- இன்றைய போட்டியில் அறிமுகம்
- அடுத்தடுத்த பந்துகளில் மூன்று விக்கெட்டுகள் (Hat-Trick)
- அறிமுக போட்டியில் ஹெட்ரிக் சாதனை படைத்த மூன்றாவது வீரர்.
- லெக் ஸ்பின் சுழல் பந்துவீச்சாளர் ஒருவர் பெற்ற முதலாவது ஹெட்ரிக் சாதனை.
 
ஆட்ட நாயகன் லக்‌ஷான் சந்தகன்

4 விக்கெட்டுகளை பெற்ற லக்‌ஷான் சந்தகன், ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டதோடு, 4/52 எனும் விக்கெட் பெறுதி, இது வரை அவர் பெற்ற விக்கெட் பெறுதிகளில் மிகச்சிறந்த பெறுதி இதுவாகும்.

காலியில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் (30) இலங்கை அணி 316 ஓட்டங்களை பெற்றிருந்த போதிலும் அவ்வோட்ட இலக்கை கடந்த சிம்பாப்வே அணி மிக இலகுவாக வெற்றியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
 
5 போட்டிகளைக் கொண்ட தொடர் 1-1 என சமனிலை.
 
மூன்றாவது போட்டி ஜூலை 06 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் இடம்பெறும் என்பதோடு, எஞ்சியுள்ள மூன்று ஒரு நாள் போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

Add new comment

Or log in with...