டெங்கு நோயை தடுக்க நீள காற்சட்டை அணியும் திட்டம் | தினகரன்

டெங்கு நோயை தடுக்க நீள காற்சட்டை அணியும் திட்டம்

 
பாடசாலை சீருடையை தற்காலிகமாக மாற்ற தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
 
கட்டை காற்சட்டை அணிந்து பாடசாலை வரும் மாணவர்களுக்கு நீள காற்சட்டை மற்றும் மாணவிகளுக்கு முழுமையாக உடலை மறைக்கும் வகையிலான சீருடைகளுடன் பாடசாலைக்கு வரமுடியும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
 
பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கிடையே டெங்கு நோய் பரவுவதன் காரணமாக, குறித்த முடிவை எடுத்துள்ளதாக கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற, பாடசாலைகளுக்கு நீர் மற்றும் சுகாதாரவசதிகளுக்கான நிதி வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
பாடசாலைகளுக்கு நீர் மற்றும் சுகாதாரவசதிகளுக்கு 1,633 பாடசாலைகளுக்காக ரூபா 1,869 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு, அந்நிதி நேற்றும் (04) இன்றும் (05) வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...