Home » ஆப்கானிஸ்தானில் மீண்டும் பூகம்பம்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் பூகம்பம்

by gayan
October 12, 2023 10:42 am 0 comment

ஆப்கானிஸ்தானில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட இரண்டு பூகம்பங்கள் ஏற்பட்ட அதே பிராந்தியத்தில் நேற்று (12) மற்றொரு சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி நேற்றுக் காலை 5.10 மணி அளவில் ஹரத் நகரின் வடக்காக 28 கிலோமீற்றர் தொலைவில் 6.3 ரிச்டர் அளவில் இந்த பூகம்பம் பதிவாகியுள்ளது. காயமடைந்த 100க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பூகம்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் உறுதியாகாதபோதும், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பூகம்பத்தில் தமது வீடுகளை இழந்த பெரும்பாலான மக்கள் திறந்த வெளியிலேயே உறங்கி வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT