அனந்தி, சர்வேஸ்வரன் அமைச்சர்களாக பதவி பிரமாணம் | தினகரன்

அனந்தி, சர்வேஸ்வரன் அமைச்சர்களாக பதவி பிரமாணம்

 
வடமாகண புதிய அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் வடமாகாண அமைச்சர்களாக ஆளுநர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.
 
 
அனந்தி சசிதரன் - மகளிர் விவகாரம், புனருத்தாபனம், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு விநியோகம் வழங்கல் மற்றும் விநியோகம், கைத்தொழில் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு அமைச்சர்.
 
 
கந்தையா சர்வேஸ்வரன் - கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், கலாசார நடவடிக்கை அமைச்சர்.
 
 
இதேவேளை, ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் இடம்பெற்ற குறித்த பதவிப் பிரமாண நிகழ்வில் நிதி மற்றும திட்டமிடல், சட்ட ஒழுங்கு, காணி, மின்சாரம், வீடமைப்பு, உல்லாசப் பயணம், மாகாண சபை, மாகாண நிர்வாகம், கமநல சேவை, கால்நடை, நீர்ப்பாசனம், நீரியல்வளம் மற்றும் சுற்றாடல்   அமைச்சுப் பொறுப்பை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
 
குறித்த இரு அமைச்சுகளும் தற்காலிகமாக  வழங்கப்பட்டுள்ளதுடன், 3 மாதங்களின் பின்னர் குறித்த அவ்வமைச்சுகள் தெரிவுக்குழுவின் ஊடாக இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)
 

Add new comment

Or log in with...