Wednesday, April 24, 2024
Home » தலவாக்கலை பிரதேச தோட்டத்தில் இரு சுகாதார மையங்கள் மீள்திறப்பு

தலவாக்கலை பிரதேச தோட்டத்தில் இரு சுகாதார மையங்கள் மீள்திறப்பு

- புனர்நிர்மானம் செய்யப்பட்டு உத்தியோகப்பூர்வமாக மக்களிடம் கையளிப்பு

by Prashahini
October 11, 2023 10:11 am 0 comment

நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட தலவாக்கலை சென்கிளயார் மற்றும் தலவாக்கலை கிறேட் வெஸ்டன் ஆகிய வெவ்வேறு தோட்டங்களில் “தாய் – சேய் சுகாதார மையங்கள்” இரண்டு புனர்நிர்மானம் செய்யப்பட்டு உத்தியோகப்பூர்வமாக நேற்று (10) மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் உள்ளிட்டோரின் சுகாதார நலன் கருதி குறித்த இவ்விரண்டு தோட்டங்களில் ஆறுமாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் யூ.என் ஹபிடாட் நிறுவனம் மற்றும் கொரியா நாட்டின் கொய்கா சமூக சேவை நிறுவனம் ஆகியவை ஒதுக்கிய10 மில்லியன் நிதி உதவியின் கீழ் இந்த சுகாதார மையங்கள் புனரமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு புனரமைக்கப்பட்ட சுகாதார மையங்கள் தோட்ட வீடமைப்பு கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து தோட்ட அதிகாரிகள் ஊடாக மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

நுவரெலியாவின் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. நந்தன கலப்பட அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வி்ல் நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். நிஷங்க விஜேவர்தன, திட்டமிடல் வைத்தியர் கமில் பிரபாஷ்வர, சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர். சுதர்சன் மற்றும், லிந்துலை பொது சுகாதார அதிகார் வைத்தியர் ஜனாத் அபரத்ன, ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மேலும், பிரதி பொது முகாமையாளர், உதவி முகாமையாளர்கள், தோட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள், தோட்ட மருத்துவ உதவியாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், (UN-Habitat) நிறுவன பிரதி திட்ட முகாமையாளர் எஸ்.எல்.அன்வர் கான் மற்றம் ஊழியர்கள் ஆகியோருடன் தோட்ட பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஆ.ரமேஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT