Saturday, April 20, 2024
Home » CWC 2023 – SLvPAK: பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் இலகு வெற்றி

CWC 2023 – SLvPAK: பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் இலகு வெற்றி

- போட்டியின் நடுவில் தசைப்பிடிப்பினால் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

by Rizwan Segu Mohideen
October 11, 2023 7:08 am 0 comment

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத் மைதானத்தில் நேற்று (10) பகலிரவு போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 344 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ், உலகக் கிண்ண அதிவேக சதம் பெற்ற இலங்கை வீரராக தன்னை பதிவு செய்து கொண்டு, 122 ஓட்டங்களைப் பெற்றார்.

மறுபுறம் சதீர சமரவிக்ரம தனது ஒருநாள் கன்னிச் சதத்தை பதிவு செய்து 108 ஓட்டங்களை பெற்றார். பெத்தும் நிஸ்ஸங்க 51 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் போது துடுப்பாட்டத்தை அடுத்து, மைதானத்தை விட்டு வெளியேறிய குசல் மெண்டிஸ் கடுமையான தசைப்பிடிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது இடத்திற்கு சதீர சமரவிக்ரம விக்கெட் காப்பாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 345 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் றிஸ்வான் ஆட்டமிழக்காது 131 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

அப்துல்லா ஷபீக் 113 ஓட்டங்களையும், சௌத் ஷகீல் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் டில்ஷான் மதுசங்க 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாக மொஹமட் றிஸ்வான் தெரிவானார்.

Sri Lanka  (50 ovs maximum)
BATTING R B M 4s 6s SR
c Abdullah Shafique b Shadab Khan 51 61 79 7 1 83.60
c †Mohammad Rizwan b Hasan Ali 0 4 7 0 0 0.00
c Imam-ul-Haq b Hasan Ali 122 77 124 14 6 158.44
c †Mohammad Rizwan b Hasan Ali 108 89 139 11 2 121.34
c †Mohammad Rizwan b Hasan Ali 1 3 5 0 0 33.33
c Shaheen Shah Afridi b Mohammad Nawaz 25 34 47 3 0 73.52
c Babar Azam b Shaheen Shah Afridi 12 18 23 0 0 66.66
c Abdullah Shafique b Haris Rauf 10 8 18 1 0 125.00
b Haris Rauf 0 4 6 0 0 0.00
not out 1 3 3 0 0 33.33
Extras (b 2, lb 2, nb 1, w 9) 14
TOTAL 50 Ov (RR: 6.88) 344/9

Did not bat: 

Fall of wickets: 1-5 (Kusal Perera, 1.4 ov), 2-107 (Pathum Nissanka, 17.2 ov), 3-218 (Kusal Mendis, 28.5 ov), 4-229 (Charith Asalanka, 30.1 ov), 5-294 (Dhananjaya de Silva, 41.1 ov), 6-324 (Dasun Shanaka, 46.3 ov), 7-335 (Sadeera Samarawickrama, 47.6 ov), 8-343 (Maheesh Theekshana, 49.2 ov), 9-344 (Dunith Wellalage, 49.6 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
9 0 66 1 7.33 27 9 1 4 0
10 0 71 4 7.10 32 6 4 3 1
9 0 62 1 6.88 23 7 1 0 0
10 0 64 2 6.40 30 6 2 1 0
8 0 55 1 6.87 20 6 1 0 0
4 0 22 0 5.50 11 2 0 1 0
Pakistan  (T: 345 runs from 50 ovs)
BATTING R B M 4s 6s SR
c sub (MADI Hemantha) b Pathirana 113 103 150 10 3 109.70
c Perera b Madushanka 12 12 15 1 0 100.00
c †Samarawickrama b Madushanka 10 15 17 1 0 66.66
not out 131 121 193 8 3 108.26
c Wellalage b Theekshana 31 30 57 2 0 103.33
not out 22 10 18 4 0 220.00
Extras (nb 1, w 25) 26
TOTAL 48.2 Ov (RR: 7.13) 345/4
Fall of wickets: 1-16 (Imam-ul-Haq, 3.3 ov), 2-37 (Babar Azam, 7.2 ov), 3-213 (Abdullah Shafique, 33.1 ov), 4-308 (Saud Shakeel, 44.3 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
10 0 59 1 5.90 23 3 0 1 0
9.2 0 60 2 6.42 27 5 1 2 1
5 0 28 0 5.60 10 2 0 0 0
9 0 90 1 10.00 14 8 1 9 0
10 0 62 0 6.20 24 4 2 0 0
4 0 36 0 9.00 7 3 2 0 0
1 0 10 0 10.00 1 1 0 0 0

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT