நொயார் தாக்குதல்; கைதான இராணுவத்தினர் அறுவருக்கும் பிணை | தினகரன்

நொயார் தாக்குதல்; கைதான இராணுவத்தினர் அறுவருக்கும் பிணை

 
ஊடகவியலாளர் கீத் நொயார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த 06 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
 
குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி, இராணுவ மேஜர் இருவர் உள்ளிட்ட, மூன்று இராணுவ புலனாய்வு அதிகாரிகளும், பெப்ரவரி 19 ஆம் திகதி மேலும் இரு இராணுவ புலனாய்வு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததோடு, மார்ச் 20 ஆம் திகதி இராணுவ புலனாய்வுப் பிரிவிலிருந்து தப்பிச் சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த நபர்கள் இன்றைய தினம் (20) கொழும்பு உயர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
கீத் நொயார், கடந்த 2008, மே மாதம் கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில்  தாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 

Add new comment

Or log in with...