பிலியந்தலை சூடு; நெருங்கிய தொடர்புடைய சந்தேக நபர் கைது

பிலியந்தலையில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த போதைவஸ்து தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தன்று இச்சந்தேக நபரே மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.தர்கா நகர், மீகம, குறுந்த வீதியைச் சேர்ந்த இச்சந்தேக நபர் 27 வயதுடையவராவார்.

பல்வேறு குற்றச்செயல்கள் காரணமாக அம்பலாங்கொடை, ஊரகஸ்மங்ஹந்திய மற்றும் அஹூங்கல ஆகிய பொலிஸ் நிலையங்களால் தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கமைய நீதிமன்றம் இச்சந்தேக நபருக்கெதிராக பிடிவிறாந்து பிறப்பித்திருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹானை விசேட பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பொலன்நறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் வைத்து இவரை கைது செய்துள்ளனர்.

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தன்று மோட்டார் சைக்கிள் செலுத்தியமை,கொலைக்கு உதவியமை,நிதியுதவி செய்தமை மற்றும் கொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் பொலிஸார் இவரைக் கைது செய்துள்ளனர்.

இவரிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் பொலிஸார் கைப்பறியுள்ளனர்.

லக்ஷ்மி பரசுராமன் 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
1 + 10 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...