நானு ஓயா வழமைக்கு; மேலும் 7 பொலிசாருக்கு இடமாற்றம்

RSM
 
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா நகரின் பாதசாரி கடவையில், பாதை கடக்க முற்பட்ட வேளையில் பலியான 06 வயது சிறுமியின் இறுதி கிரியைகள் நாளை (17) ரதல்ல கீழ்பிரிவு தோட்டத்தில் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
 
 
அத்தோடு நானுஓயா நகரமும், பிரதேசமும் பதற்றநிலையிலிருந்து ஒரு சுமூகமான நிலைக்கு திரும்பியுள்ளது.
 
உயிரிழந்த சிறுமியின் அஞ்சலிக்காக பிரதேச மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேவேளை அப்பகுதியில் அனுதாப பதாதைகள் மற்றும் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
 
 
 
நேற்றைய தினம் (15) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், பொலிசார் 07 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
 
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில், நேற்றைய தினம் (15) நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுவரெலியா பொலிஸ் தலைமையகத்துக்கு தற்காலிகமாக, இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நானுஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியின்மை நிலைமை தொடர்பான விசாரணைகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
 
 
 
(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
10 + 7 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...