கீதாவின் வழக்கை விசாரிக்க விசேட நீதவான்கள் குழு | தினகரன்

கீதாவின் வழக்கை விசாரிக்க விசேட நீதவான்கள் குழு

கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என, வழக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய ஐந்து நீதவான்களைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பிரதம நீதியரசரால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க செப்டம்பர் (15)இந்த மனு மீதான விசாரணை மீள இடம்பெறவுள்ளது.

இரட்டை குடியுரிமையை கொண்டுள்ள கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என, அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக கீதா குமாரசிங்க உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...