'எப்படியாவது வெல்வோம் என்பது குறிக்கோளாக இருக்கக்கூடாது' | தினகரன்

'எப்படியாவது வெல்வோம் என்பது குறிக்கோளாக இருக்கக்கூடாது'

முன்னாள் இலங்கை அணியின் தலைவரும் ஐசிசி போட்டி நடுவருமான ரொஷான் மஹாநாம 1984 ல் ஒப்சேர்வர் பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றார். மெகா காட்சி மூலம் பிரகாசித்த ஒரு தாரகை அவராவார்.

1980 களில் இவரின் பெயர் வீட்டுப் பெயராக ஒலித்தது.

கொழும்பு ஆனந்த கல்லூரி இவரை உருவாக்கியது.

1983ல் ஒப்சேர்வர் விருதைப் பெற்ற அவர் 1984 லும் இரண்டாவது முறையாக விருதை தமதாக்கிக் கொண்டார்

முன்னாள் ஆனந்த தலைவர் அர்ஜுன ரணதுங்கவும் இரு முறை இந்த விருதைப்பெற்றவர்.

பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் தமது இலக்கை அடைய கடுமையாகப் பணியாற்ற வேண்டும்.

ஒழுக்க நெறி அமைய வேண்டும். விளையாட்டின் உயரிய பாரம்பரியத்தைப் பேண வேண்டும் என்றும் மஹானாம கூறுகிறார்.

வெற்றிக்கு குறுக்கு வழிகளை நாடாமல் தியாகங்களை செய்ய பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் விருப்பமாக இருக்க வேண்டும்.

இளம் கிரிக்கெட் வீரர்கள் தமது இலக்கை அடைய அர்ப்பண சிந்தையுடன் பணியாற்ற விருப்பம் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சீஸனின் இறுதியிலும் மெகா காட்சி கிரிக்கெட் வீரர்களை நெறிப்படுத்தியுள்ளது. அவர்களின் கடும் உழைப்பு அங்கீகாரம் பெறுகிறது.

இளைஞர்கள் என்ற வகையில் இந்த மெகா காட்சி எம்மை நெறிப்படுத்தியது. எனது வெற்றியின் பலமிக்க கோபுரமாக எனது தந்தையார் உபாலி மஹானாம விளங்கினார்.

அவர் எமது வாழ்வில் பெறுமானங்களையம், ஒழுக்கத்தையும் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

அப்போது நான் லயனல் சேரின் (லயனல் மெண்டிஸ்) கவனிப்பில் இருந்து வந்தேன்.

பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கு போதியளவு ஓய்வு கொடுக்கப்பட வேண்டும். எமது காலத்தில் ஆட்டங்களுக்கு இடையில் எமக்குப் போதுமான ஓய்வு வழக்கப்பட்டது.

அணியின் கோட்பாடுகளைப் பின்பற்றி ஆட்டத்தை மதித்து அதன் கலாசாரத்தையும் பேண நாம் அறிவூட்டப்பட்டோம்.

எமது பயிற்றுவிப்பாளர்கள் முன்மாதிரியாக இருந்து கௌரவத்வதைப் பெற்றனர். நடுவர்களுக்கு நாம் உயரிய மரியாதையைக் கொடுத்தோம்.

அநேகர் “ரிமோட் கொன்ட்ரோ”லில் நடுவில் இருக்கின்றனர் தமது சொந்தக் காலில் நின்று தீர்மானம் எடுக்க அவர்களால் முடிவதில்லை.

எவ்வாறாயினும் வெற்றி கொள்வது என்பது எமது நோக்காக இருக்கக்கூடாதென்றும் மஹானாம தெரிவித்தார். தேசிய அணியில் சேர்வதற்கு தரம் கெட்ட நிலைமைகள் பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்குத் தடையாக உள்ளன.

கடந்த காலங்களில் ரன்ஜன்மடுகல்ல போன்றோர் நேரடியாக பாடசாலையிலிருந்து தேசிய அணியில் இடம்பெற்றவர்.

19 வயதுக்குக் குறைந்த அணியில் பாடசாலை மாணவர்கள் சர்வதேச ஆட்டங்கிளல் பங்கு கொள்ள வாய்ப்புக்களைப் பெறுவதில்லை.

வெளி மாவட்ட அணிகளுக்கு நாம் அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்.

அது தரத்மதின் செலவில் நிகழக்கூடாது. ஒப்சேர்வர் விருது எனது வாழ்வின் முக்கிய மைல் கட்டமாகும்.

எனது கனவு நனவாகியது மகிழ்ச்சி தருகிறது.

ஒப்சேர்வர் விருது எம்மை உரமூடடியது. நாமும் கௌரவம் பெற்றோம்.

உயரிய இடத்தை எய்துவதற்கு ஒப்சேர்வர் விருது வழிகோலியது என்று மஹானாம தெரிவித்தார்.

கடந்த மாதம் மஹாநாமவுக்கு 51 வயது ஆனது.

52 டெஸ்ட் ஆட்டங்களில் இவர் இலங்கையைப் பிரதிநிதித்தும் செய்தார். நான்கு சதங்கள் 11 ஜம்பதுகளுடன் 2576 ஓட்டங்களை இவர் பெற்றார். (எப். எம்) 


Add new comment

Or log in with...