ஆசிய தடகள போட்டி; பங்கேற்கும் இலங்கை வீரர்களுடன் அமைச்சர் தயாசிறி ஜயசேகர சந்திப்பு | தினகரன்

ஆசிய தடகள போட்டி; பங்கேற்கும் இலங்கை வீரர்களுடன் அமைச்சர் தயாசிறி ஜயசேகர சந்திப்பு

விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆசிய தடகள போட்டியை பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை குழுவினரை (14) சந்தித்தார் இலங்கை தடகள விளையாட்டு குழுவினர் கொழும்பு 7 இல் உள்ள டொரிங்டன் மைதானத்தில் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர். (பயிற்சியின் போதே அவர்களை அமைச்சர் சந்தித்தார்.

இலங்கைக் குழுவின் வீர, வீராங்கனைகளும் பயிற்சியாளர்களும் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். வீர, வீராங்கனைகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து அமைச்சரிடம் நேரடியாக கூறக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.

உணவு, போசனைக்கான கொடுப்பனவு போன்ற பிரச்சினைகள் குறித்து அமைச்சரிடம் பிரஸ்தாபிக்கப்பட்டது. அமைச்சர் உடனடியாக குறிப்பிட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஜுலை மாதம் 06 ஆம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதி வரை இந்தியாவில் புபனேஸ்வர் மைதானத்தில் இப்டேடிகள் நடைபெறவுள்ளன.

போட்டிகளில் கலந்துகொள்ளும் இலங்கை அணி ஜூன் மாத இறுதியில் இந்தியாவுக்கு செல்லவுள்ளது.

விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர தினமும் காலையில் உடற் பயிற்சிக்காக சைக்கிளோட்டத்தில் ஈடுபடுவார். அதன் போதே இச்சந்திப்பு நிகழ்ந்தது. இச் சந்திப்பில் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் பாலித பெர்னாண்டோ ஆகியோரும் உடனிருந்தனர். 


Add new comment

Or log in with...