விராட் கோலி புதிய சாதனை | தினகரன்

விராட் கோலி புதிய சாதனை

அதிவேகமாக 8000 ஒட்டங்களை கடந்து இந்திய அணியின் தலைவர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முந்தைய டிவில்லியர்ஸின் சாதனையையும் கோலி முறியடித்தார்.

சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷை இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தோற்கடித்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசினார். இந்த போட்டியில் 96 ஓட்டங்களை எடுத்த கோலி 8 ஆயிரம் ஓட்டங்களை அதிவேகமாக கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் 88 ஓட்டங்களை சேர்த்த போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார். தனது 175-வது இன்னிங்சில் இந்த இலக்கை கடந்த விராட் கோலி இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 8000 ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

இதற்கு முன்பு தென்ஆபிரிக்க அணியின் தலைவர் ஏ .பி .டி.வில்லியர்ஸ் 182 இன்னிங்சில் இந்த இலக்கை தொட்டதே சாதனையாக இருந்தது. அதை கோலி முறியடித்து இருக்கிறார்.

இந்திய தரப்பில் சௌரவ் கங்குலி 200 இன்னிங்சிலும், சச்சின் டெண்டுல்கர் 210 இன்னிங்சிலும், தோனி 2414 இன்னிங்சிலும் 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

28 வயதான விராட் கோலி இதுவரை 27 சதங்கள், 42 அரைசதங்கள் உட்பட 8,008 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். 


Add new comment

Or log in with...