இறுதிப்போட்டியில் இந்திய−பாக் அணிகள் கிண்ணம் யாருக்கு? நாளை பலப்பரீட்சை | தினகரன்

இறுதிப்போட்டியில் இந்திய−பாக் அணிகள் கிண்ணம் யாருக்கு? நாளை பலப்பரீட்சை

சம்பியன்ஸ் கிண்ண இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) லண்டன் ஓவலில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.சி.சி. தொடர் ஒன்றில், சம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் யுத்தம் நடத்துவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகள் சந்தித்ததும், அதில் இந்தியா வாகை சூடியதும் நினைவிருக்கலாம்.

சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் சந்திக்க உள்ளன. சம்பியன்ஸ் கிண்ண இறுதி ஆட்டத்தில் இரு ஆசிய அணிகள் மல்லுகட்டுவது இது 2-வது நிகழ்வாகும்.

இதற்கு முன்பு 2002-ம் ஆண்டில் இந்தியாவும், இலங்கையும் மோதி இருந்தன. இதை மையப்படுத்தி இந்திய முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி டுவிட்டரில் ‘ஒரு ஆசிய கோப்பை இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் நடக்கப்போகிறது.

இப்படி நடக்கும் என்று யாராவது கனவு கண்டு இருப்பார்களா?’ என்று கூறியுள்ளார்.

சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இறுதிப்போட்டியை எட்டுவது இது 4-வது முறையாகும். ஏற்கனவே 2000-ம் ஆண்டு (2-வது இடம்), 2002-ம் ஆண்டு (சம்பியன்), 2013-ம் ஆண்டுகளில் (சம்பியன்) இறுதிப்போட்டிக்கு வந்திருந்தது. 4 முறை இறுதிபோட்டிக்குள் அடியெடுத்து வைத்த ஒரே அணி இந்தியா தான். 


Add new comment

Or log in with...