முதலமைச்சருக்கு எதிரான செயற்பாடு; ஸ்ரீல.சு.கவுக்கு எந்த தொடர்பும் இல்லை | தினகரன்

முதலமைச்சருக்கு எதிரான செயற்பாடு; ஸ்ரீல.சு.கவுக்கு எந்த தொடர்பும் இல்லை

வடமாகாண சபை உறுப்பினர் சிலர் முதலமைச்சருக்கு எதிராக செயல்படுவதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என அங்கஜன் இராமநாதன் எம்,பி தெரிவித்துள்ளார். அங்கஜன் எம்.பி. நேற்று(16) வெளியிட்ட உத்தியோக பூர்வ ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலஞ்சத்திற்கும் ஊழலுக்கும் எதிரான கட்சியே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியாகும். இதன் தலைவரே இந்நாட்டின் ஜனாதிபதியாகவும் இருக்கின்றார்.

எமது ஜனாதிபதியின் கொள்கையே இன்று இலஞ்ச ஊழல் அற்ற நாட்டை உருவாக்கியுள்ளதுடன், இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தியுமுள்ளது.

இப்படியிருக்க வடமாகாண சபையின் முதல்வர் இலஞ்ச ஊழல் தொடர்பாக எடுத்த எந்த ஒரு முடிவுக்கும் எதிராக நாம் செல்லவில்லை. எமக்கு அவ்வாறான பணிப்புரைகள் எதையும் ஜனாதிபதிவிடுக்கவுமில்லை.

இந்நிலையில் வட மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெயரை பயன்படுத்திக்கொண்டு வடக்கு முதலமைச்சருக்கு எதிராக செயல்படுவதென்பது அவர்கள் தன்னிச்சையாக எடுத்த முடிவே ஆகும் .

இவர்களால் வெளியிடப்பட்ட முடிவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் எந்த விதத்திலும் தொடர்போ பொறுப்போ கிடையாது என்பதை ஸ்ரீலங்கா சுதந்திர கடசியின் யாழ்ப்பாண கிளிநொச்சி தேர்தல் மாவட்ட தலைவர் என்ற ரீதியில் அனைத்து வடக்கு வாழ் தமிழ் உறவுகளுக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன் .

வடக்கு முதலமைச்சர் இலஞ்ச ஊழலுக்கு எதிராக முடிவெடுக்கும் போது அதை தவறு என இன்னொரு கட் சியினரே அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து அவரை பதவிநீக்க செயல்படுகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட் சியின் பெயரை இதில் பயன் படுத்தி கொள்வது ஆரோக்கியமானதல்ல .

வடக்கு முதலமைச்சரின் மக்கள் நலன் சார்ந்த நல்ல விடயங்களையும் செயல்பாடுகளையும் முதன் முதலில் வரவேற்றவர்களில் நானும் ஒருவன்.

எல்லா விதத்திலும் துன்ப துயரங்களை அனுபவித்த எம்மக்களின் வலிகளை நாம் உணரவேண்டும்.

இதை உணராத சில அரசியல்வாதிகள் எதற்கும் கட்டுப்படாமல் மற்றவர்களின் அறிவுரைகளையும் எடுக்கும் முடிவுகள் வடக்கு மக்களுக்கு எதிராக எடுக்கும் முடிவுகளாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

புங்குடுதீவு குறுப் நிருபர்

You voted 'ஆம் '.

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...