விடுதலையான கடாபி மகனை கைதுசெய்ய ஐ.சி.சி கோரிக்கை | தினகரன்

விடுதலையான கடாபி மகனை கைதுசெய்ய ஐ.சி.சி கோரிக்கை

ஆறு ஆண்டுகள் சிறைக்கு பின் லிபிய கிளர்ச்சியாளர்களால் கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாமை கைது செய்து ஒப்படைக்கும்படி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி) கோரியுள்ளது.

2011 ஆம் ஆண்டு தனது தந்தைக்கு எதிரான கிளர்ச்சியின்போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதற்காகவே சைப் அல் இஸ்லாம் தேடப்பட்டு வருகிறார்.

அவர் தற்போது எங்கு உள்ளார் என்பது உறுதி செய்யப்படவில்லை. அவர் விடுவிக்கப்பட்டதற்கு லிபியாவின் ஐ.நா ஆதரவு அரசு கண்டனம் வெளியிட்டுள்ளது.

அவரது விடுதலை நாட்டில் மேலும் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தும் என்று அச்சம் வெளியாகியுள்ளது.

பொதுமன்னிப்பு சட்டம் ஒன்றின் கீழ் மேற்கு நகரான சின்தானில் உள்ள அபூபக்கர் அல் சித்தீக் கிளர்ச்சியாளர்களாலேயே கடந்த வெள்ளிக்கிழமை சைப் அல் இஸ்லாம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை கைது செய்து ஒப்படைக்கும்படி லிபியா மற்றும் ஏனைய நாடுகளை ஹேகை தளமாகக் கொண்ட ஐ.சி.சி கேட்டுக் கொண்டுள்ளது. 


Add new comment

Or log in with...