நீதிக்கு இடையூறு: டிரம்ப் மீது விசாரணை | தினகரன்

நீதிக்கு இடையூறு: டிரம்ப் மீது விசாரணை

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதா என்பதை விசாரிக்கும் சிறப்பு ஆலோசனைக் குழு, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் நீதிக்கு இடையூறு விளைவிக்க முயற்சி செய்தாரா என ஆராய்கிறது. சிறப்பு ஆலோசனைக் குழுவை வழிநடத்தும் ரொபர்ட் முல்லரின் புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்க மூத்த புலனாய்வு அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

அத்தகைய ஐவரின் பெயரை வொஷிங்ட்டன் போஸ்ட் நாளேடு வெளியிட்டது.

தேசிய உளவுத் துறையின் இயக்குநர் டேனியல் கோட்ஸ், தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் அட்மிரல் மைக் ரோஜர்ஸ் அதன் முன்னாள் துணைத் தலைவர் ரிச்சர்ட் லெட்கெட் ஆகியோரே அவர்கள்.

அந்தப் பேட்டி, இவ்வாரம் வெளிவரக்கூடும் என நாளிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர் ஜேமஸ் கோமியைப் பதவியிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை விசாரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது.

ரஷ்யாவுடனோ அதன் தொடர்புடையவர்களுடனோ தமக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை எனத் டிரம்ப் வலியுறுத்திவருகிறார். 


Add new comment

Or log in with...