இளவரசர் உருவம் பொறித்த ரி-சேர்ட்: சர்ச்சையில் கத்தார் கால்பந்து அணி | தினகரன்

இளவரசர் உருவம் பொறித்த ரி-சேர்ட்: சர்ச்சையில் கத்தார் கால்பந்து அணி

தங்களது நாட்டு இளவரசரின் உருவம் பொறித்த ரி -சேர்ட் அணிந்து பயிற்சியில் ஈடுபட்ட கத்தார் கால்பந்து அணிக்கு சிக்கல் உருவாகி உள்ளது.

பிபா உலகக் கோப்பை கால் பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஷ்யாவில் நடைபெறுகிறது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங் கள் உலகின் பல்வேறு பகுதி களில் நடைபெற்று வருகின்றன.

இதில் தோகாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கத்தார் - தென் கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக கத்தார் அணி வீரர்கள் தங்களது நாட்டு இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி உருவம் பொறித்த ரி -சேர்ட் அணிந்தபடி பயிற்சியில் ஈடுபட்டனர்.

கத்தார், தீவிரவாதத்துக்கு உதவி வருவதாக அந்நாட்டுடன் வளைகுடாவை சேர்ந்த சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் உள்ளிட்ட நாடுகள் அனைத்து தொடர்புகளையும் துண்டித்துள்ளன. இந்த நெருக்கடி யான நேரத்தில் இளவரசருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த ரி -சேர்ட்களை வீரர்கள் அணிந்துள் ளனர்.

தகுதி சுற்று ஆட்டத்தில் கத்தார் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கிய 25-வது நிமிடத்தில் கத்தார் அணியின் நடுகள வீரரான ஹசன் அல் ஹைடோஸ் முதல் கோலை அடித்தார். அவர் கோல் அடித்ததும் டச்லைனுக்கு வெளியே ஓடி வந்தது, கத்தார் இளவரசர் படம் பொறித்த ரி -சேர்ட்டை ரசிகர்கள் முன் உயர்த்தி காண்பித்தார். 


Add new comment

Or log in with...