ஞானசார தேரருக்கு மீண்டும் பிடியாணை | தினகரன்

ஞானசார தேரருக்கு மீண்டும் பிடியாணை

 
பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் பிடியாணை விடுக்கப்பட்டுள்ளது.
 
இனவாத கருத்துகளை வெளியிட்டமை தொடர்பில், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு ஆஜராகாமை தொடர்பில் அவரை கைது செய்துமாறு பிடியாணை விதிக்கப்பட்டுள்ளது.
 
கொழும்பு 02 இலுள்ள, நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது, இஸ்லாம் மதத்தையும், முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனையும் அவமதித்தார் எனும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய தினம் (15) குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது கொழும்பு கோட்டை நீதிமன்றினால் குறித்த பிடியாணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

Add new comment

Or log in with...