ஒரு வித காய்ச்சல்; களனி பல்கலை 10 நாட்களுக்கு பூட்டு | தினகரன்

ஒரு வித காய்ச்சல்; களனி பல்கலை 10 நாட்களுக்கு பூட்டு

 
களனி பல்கலைக்கழகம் எதிர்வரும் ஜூன் 26 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
களனி பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடையே பரவி வரும் அடையாளம் காணப்படாத காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் காரணமாக இம்முடிவுக்கு வந்ததாக பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
 
குறித்த விடயம் தொடர்பில், பிரதான வைத்தியரின் ஆலோசனைக்கமைய வைத்திய பீடங்கள் தவிர்ந்த ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் ஜூன் 26 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஊடகப்பிரிவின் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
 
அதன் அடிப்படையில் எதிர்வரும் ஜூன் 27 ஆம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜூன் 26 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருப்போர், அங்கு சமூகமளிக்க முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Add new comment

Or log in with...