Friday, March 29, 2024
Home » அண்ணாமலைப் பல்கலைக்கழக 89 ஆவது நிறுவுனர் தின விழா

அண்ணாமலைப் பல்கலைக்கழக 89 ஆவது நிறுவுனர் தின விழா

மருத்துவ நூலும் வெளியீடு

by damith
October 10, 2023 12:18 pm 0 comment

உலகப் புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 89ஆவது நிறுவுனர் தின விழா கொண்டாட்டங்கள் அண்மையில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. துணைவேந்தர் டாக்டர் கதிரேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக முன்னாள் மாணவரான பிரபல முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் எஸ்.எம். பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிறுவுனர் தின உரையை வழங்கினார்.

அவர் தனது உரையில், தற்போதைய துணைவேந்தரின் திறமையான தலைமையின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நினைவுகூர்ந்தார். இவ்விழாவில் பேராசிரியர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி எழுதிய ‘Text book of Maxillofacial Surgery’ புத்தகத்தின் 04ஆவது பதிப்பு துணைவேந்தரால் வெளியிடப்பட்டது. இதன் முந்தைய பிரதிகள் இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளிலும் பல் மருத்துவ மாணவர்களால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு, மருத்துவ உலகில் முக்கியத்துவம் வாய்ந்த நூலாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT