தங்க கடத்தல்; விமான நிலையத்தில் விமானப்படை வீரர் கைது | தினகரன்

தங்க கடத்தல்; விமான நிலையத்தில் விமானப்படை வீரர் கைது

(வைப்பக படம்)
 
தங்கக் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணி புரிந்து வந்த விமானப் படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சுமார் ரூபா ஒரு கோடி பெறுமதியான 2 கிலோ கிராமிற்கும் அதிகமான தங்க நகைகளை கடத்திச் செல்ல முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சந்தேகநபர், தங்கத்தை தனது காலணியில் மறைத்து எடுத்துச் செல்லும்போது, மேற்கொண்ட விசாரணைகளையடுத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த தங்கத்தை, வெளிநாடு செல்லும் மற்றுமொருவருக்கு வழங்குவதற்காக எடுத்துச் செல்ல முயற்சித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
 

Add new comment

Or log in with...