ராகுலை 'பப்பு' என்று அழைத்த காங்கிரஸ் தலைவர் நீக்கம் | தினகரன்

ராகுலை 'பப்பு' என்று அழைத்த காங்கிரஸ் தலைவர் நீக்கம்

காங்கிரஸ் துணை தலைவர் ராகுலை 'பப்பு' என அழைத்த மீரட் மாவட்ட காங்கிரஸ் தலைவர், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.க உள்ளிட்ட சில கட்சியினர், ராகுலை 'பப்பு' என கிண்டலாக அழைத்து வருகின்றனர். உ.பி. மாநிலம் மீரட் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வினய் பிரதாப் என்பவர் ' இந்தியன் நேஷனல் காங்கிரஸ்' என்ற பெயரிலான வட்ஸ் அப் குழுவில் சமீபத்தில் ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

அதானி, அம்பானி, மல்லையா போன்ற தொழிலதிபர்களுடன் பப்பு சேர்ந்து இருக்க முடியும்; ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. பப்புவால் ஒரு அமைச்சராகவோ ஏன்... பிரதமராகவோ கூட ஆகியிருக்க முடியும். ஆனால் அவர் அந்த பாதையில் செல்லவில்லை. ம.பி. மாநிலத்தில் துப்பாக்கி சூட்டில் ஐந்து விவசாயிகள் உயிர் இழந்த மண்ட்சவர் கிராமத்திற்கு தான் அவர் செல்கிறார்.

இவ்வாறு வினய் பிரதான் குறிப்பிட்டு இருந்தார். 


Add new comment

Or log in with...