ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால்... கருத்து கணிப்பு கூறும் முடிவு என்ன? | தினகரன்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால்... கருத்து கணிப்பு கூறும் முடிவு என்ன?

தந்தி டிவி சார்பில் மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடபட்டு உள்ளன.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முதலமைச்சராகும் வாய்ப்பு உள்ளதா...?, மற்றொரு சினிமா நட்சத்திரத்தை முதல்-அமைச்சராக தமிழக மக்கள் தேர்வு செய்வார்களா? ரஜினிகாந்த் அரசியலில் சாதிப்பாரா?, அரசியலில் ரஜினிகாந்த் கண்டிப்பாக செய்ய வேண்டியது என்ன? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் மக்களிடையே கேட்கப்பட்டன.

அதற்கு அவர்கள் அளித்த பதில்களை கொண்டு பிரமாண்ட கருத்து கணிப்பு எடுக்கப்பட்டு உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முதலமைச்சராகும் வாய்ப்பு உள்ளதா...? என்ற கேள்விக்கு அதிக வாய்ப்பு உள்ளது என 42 சதவீதம் பேரும், வாய்ப்பே இல்லை என 46 சதவீதம் பேரும் கருத்து இல்லை என்பதற்கு 12 சதவீதம் பேரும் வாக்களித்து உள்ளனர்.

மற்றொரு சினிமா நட்சத்திரத்தை முதல்-அமைச்சராக தமிழக மக்கள் தேர்வுச் செய்வார்களா? என்ற கேள்விக்கு 44 சதவீதம் பேர் ஆம் என்றும், 40 சதவீதம் பேர் இல்லை 16 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் கூறி உள்ளனர்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன் என 44 சதவீதம் பேரும், எதிர்க்கிறேன் என 39 சதவீதம் பேரும்,கருத்து இல்லை என 17 சதவீதம் பேரும் கூறி உள்ளனர்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் கன்னடர் என்பது அவரது வளர்ச்சியை பாதிக்குமா? என்ற கேள்விக்கு பாதிக்கும் என 38 சதவீதம் பேரும்,பாதிக்காது என 50 சதவீதம் பேரும்,கருத்து இல்லை என 12 சதவீதம் பேரும் கூறி உள்ளனர்.

ரஜினிகாந்த் அரசியலில் சாதிப்பாரா என்ற கேள்விக்கு சாதிப்பார் என 47 சதவீதம் பேரும், மாட்டார் என 39 சதவீதம் பேரும் கருத்து இல்லை என 13 சதவீதம் பேரும் கூறி உள்ளனர்.

அரசியலில் ரஜினிகாந்த் கண்ட்டிப்பாக செய்ய வேண்டியது என்ன? என்ற கேள்விக்கு தேசிய கட்சியில் இணைப்பு என 10 சதவீதம் பேரும், மாநில கட்சியில் இணைப்பு என 26 சதவீதம் பேரும், புதிய கட்சி தொடங்க வேண்டும் என 64 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்து உள்ளனர். 


Add new comment

Or log in with...