பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூபா 10 ஆயிரம் பெறுமதியான பொதி | தினகரன்

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூபா 10 ஆயிரம் பெறுமதியான பொதி

(வைப்பக படம்)
 
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சீருடை, பாடசாலை புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொதிகளை விநியோகிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார்நிலையில் இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இதனடிப்படையில் பாதிப்புக்கு உள்ளான ஒவ்வொரு மாணவருக்கும் சுமார் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான பாடப்புத்தகங்கள், சீருடைகள் அடங்கிய தனித்தனி பொதிகள் வழங்கப்படவுள்ளன. பல தனியார் அமைப்புக்களும் இச்செயற்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் பொதி செய்யும் இறுதி கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியடைந்திருப்பதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்தது.
 
இந்த பொதிகளில் பாடசாலை புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள், சீருடைத் துணிகள்,பாடசாலை உபகரணங்கள் மற்றும் சப்பாத்து கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
(லக்‌ஷ்மி பரசுராமன்)
 

Add new comment

Or log in with...