மீன் இறக்குமதி வரி ரூபா 25 இனால் குறைப்பு | தினகரன்

மீன் இறக்குமதி வரி ரூபா 25 இனால் குறைப்பு

 
இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கான விசேட இறக்குமதி வரி ரூபா 25 இனால் குறைக்கப்பட்டுள்ளது.
 
நிதியமைச்சினால் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன் அடிப்படையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் மீனிற்கான வரி ரூபா 75 இலிருந்து ரூபா 50 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அனர்த்த நிலைமை காரணமாக தற்போது மீன் உற்பத்தி குறைந்துள்ளமையினால், நுவர்வோருக்கு அவசியமான மீனை பெற்றுக்கொடுக்கவும், மீனை சலுகை விலையில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை நோக்காகக் கொண்டு இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கைக்கு மாதாந்தம் சுமார் 2,000 மெட்ரிக் தொன் மீன் இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...