80 களின் நடிகர் –நடிகைகள் ஒன்றுகூடல் சீனாவில் | தினகரன்

80 களின் நடிகர் –நடிகைகள் ஒன்றுகூடல் சீனாவில்

1980களில் கொடிகட்டப் பறந்த நடிகர் – நடிகைகளின் இந்த வருட சந்திப்பு விரைவில் நடக்க இருக்கிறது.

1980-களில் தமிழ் சினிமாவைக் கலக்கிய பல நடிகர்கள் இன்று அப்பா – அம்மா கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். ரஜினி, கமல், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால் என ஒருசில நடிகர்கள் மட்டுமே இன்றும் ஹீரோவாக நடிக்கின்றனர். ஒருசிலரோ, எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

இந்நிலையில், அவர்கள் எல்லோரும் வருடத்துக்கு ஒருமுறை சந்தித்துக் கொள்ளும் நிகழ்ச்சி, கடந்த சிலபல வருடங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ரஜினி, ரகுமான், மோகன், சத்யராஜ், பிரபு, சிரஞ்சீவி, ஜெயராம், பானுபிரகாஷ், கே.பாக்யராஜ், சரத்குமார், ராதா, அம்பிகா, ராதிகா, நதியா, ரேவதி, லிசி, ரம்யா கிருஷ்ணன், சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு என பல நடிகர் – நடிகைகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு வருகின்றனர். இந்த முறை, சீனாவில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது.

ஜூலை மாதம் நடைபெறும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள அனைவரும் சீனா செல்கின்றனர். 


Add new comment

Or log in with...