அமைச்சு பொறுப்பில் மேலும் சில மாற்றங்கள் | தினகரன்

அமைச்சு பொறுப்பில் மேலும் சில மாற்றங்கள்

 

4 இராஜாங்க அமைச்சர்கள்; 4 பிரதியமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்

 
இன்றையதினம் (31) பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
 
இதில் ஏற்கனவே அமைச்சுப் பொறுப்பில் இருந்த அமைச்சர்கள் சிலருக்கு வேறு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
அந்த வகையில், வெளிவிவகார பிரதி அமைச்சராக கடமைபுரிந்த, ஹர்ஷ டி சில்வா, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவாகார பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
 
அதேபோன்று, அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய, இரான் விக்ரமரத்ன, நிதி இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
 
இராஜாங்க அமைச்சர்கள்
1. இரான் விக்ரமரத்ன - நிதி இராஜாங்க அமைச்சர்
2. பாலித ரங்கே பண்டார - நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்
3. லக்‌ஷ்மன் யாப்பா அபயவர்தன - அரச தொழில் முயற்சி இராஜாங்க அமைச்சர்
4. வசந்த சேனாநாயக்க - வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்
 
பிரதி அமைச்சர்கள்
1. ஹர்ஷ டி சில்வா - தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவாகார பிரதியமைச்சர்
2. கரு பரணவிதான - திறன் அபிவிருத்தி பிரதியமைச்சர்
3. ரஞ்சன் ராமநாயக்க - சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலை நாட்டு அபிவிருத்தி துறை பிரதியமைச்சர்
4. லசந்த அலகியவன்ன - நிதி மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர்
 
 

Add new comment

Or log in with...