மல்லிகை தீவு சிறுமிகள் துஷ்பிரயோகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் | தினகரன்

மல்லிகை தீவு சிறுமிகள் துஷ்பிரயோகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 
மல்லிகை தீவில் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டதை கண்டித்து, மட்டக்களப்பில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
 
 
இன்று (01) இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில், குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு தண்டணை வழங்குமாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்திருந்தனர்.
 
முற்போக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில மட்டக்களப்பு பஸ் தரிப்பிட முன்றலில் இருந்து ஆரம்பமான கண்டனப் பேரணி மட்டக்களப்பு நகரின் காந்திப்பூங்காவுக்கு முன்னாள் நிறைவடைந்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
 
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திருகோணமலை மாவட்டத்தின் மல்லிகை தீவில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோத்துக்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்ததுடன் இதற்கு காரணமாக இருந்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழங்கப்படல் வேண்டுமெனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
 
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)
 
 

Add new comment

Or log in with...