அமைச்சரவை முடிவுகளை அறிவிக்க மூன்று அமைச்சர்கள் | தினகரன்

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்க மூன்று அமைச்சர்கள்

அமைச்சரவைக்கு மூன்று இணைப் பேச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எத்தகைய விசேட காரணங்களும் இல்லையென இணை அமைச்சரவை பேச்சாளர்களான கயந்த கருணாதிலக மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தெரிவித்தனர்.

மூன்று இணை அமைச்சரவை பேச்சாளர்கள் இனி அமைச்சரவை ​பேச்சாளர்களாக செயற்பட இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் சுதந்திரக் கட்சி சார்பில் நியமிக்கப்பட்ட இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர முதல் முறையாக பங்கேற்றார்.

ஏற்கெனவே இணை அமைச்சரவை பேச்சாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன நீக்கப்பட்டுள்ளாரா என ஊடகவியலாளர்கள் வினவினர்.இதற்குப் பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக: மூவர் இணை அமைச்சரவை பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு வேறு காரணம் கிடையாது என்றார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் தயாசிரி ஜெயசேகர ,இரு கட்சிகள் கொண்ட ஆட்சி என்பதால் சு.க சார்பிலும் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எமது கருத்துகள் கட்சி சார்பில் அன்றி அரசின் நிலைப்பாடாகவே இருக்கும் என்றார்.(பா) 


Add new comment

Or log in with...