23 வயது இளைஞரை 3 பெண்கள் சேர்ந்து | தினகரன்

23 வயது இளைஞரை 3 பெண்கள் சேர்ந்து

தென் ஆபிரிக்காவில் 23 வயது இளைஞரை 3 பெண்கள் சேர்ந்து 3 நாட்கள் பலமுறை கற்பழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆபிரிக்காவில் உள்ள ப்ரீடோரியா நகரத்தின் கிழக்கு பகுதியில் டாக்சி ஓட்டுநராக சென்ற இளைஞரை, 3 பெண்கள் கடத்தி அவருக்கு போதை மருந்துகள் கொடுத்து கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

23 வயதான ஓர்டியல் என்ற இளைஞரை கடத்திச் சென்ற மூன்று பெண்கள், ஓர்டியலை தொடர்ந்து 3 நாட்கள் கொடூரமாக கற்பழித்துள்ளனர். அதுவும் ஒரே நாளில் பலமுறை கற்பழித்துள்ளது மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மயக்க மருந்து மூலம் கடத்திச் செல்லப்பட்ட ஓர்டியல், கண்விழித்த போது ஏதோ ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் மயக்க நிலையில் இருந்து தெளிந்த ஓர்டியலை 3 பேரும், 3 நாட்கள் பலமுறை கற்பழித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், சம்பந்தப்பட்ட 3 பேரை தேடி வருகின்றனர். குற்றவாளிகள் 3 பேருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று தென்ஆபிரிக்க பொலிஸ் அதிகாரி கோலெட் வெய்ல்பேச் தெரிவித்துள்ளார்.

தென்ஆபிரிக்காவில் ஆண், பெண் என கற்பழிப்பு சம்பவங்கள் பெருவாரியான அளவுகளில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு வருடத்தில் சுமார் 5 இலட்சம் பேர் வரை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...