நிவாரண பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து | தினகரன்


நிவாரண பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து

 
இலங்கை விமானப் படைக்கு சொந்தமான MI17 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (29) காலை விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
 
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த ஹெலிகொப்டர், காலி பத்தேகம பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர், குறூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
 
 
குறித்த ஹெலிகொப்டரை தரையிறக்கம் செய்யும் போது, ஏற்பட்ட கோளாறு காரணமாக, குறித்த ஹெலிகொப்டர் விமானியினால் திடீர் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
 
இவ்விபத்து இடம்பெற்றபோது, விமான அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் உள்ளிட்ட 11 பேர், அதில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 
குறித்த அனர்த்தத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆயினும் விமானத்திற்கு அதிகளவான சேதம் ஏற்பட்டுள்ளதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
 
 
 

Add new comment

Or log in with...