Home » யுகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகள் – அத்தியாயம் 57

யுகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகள் – அத்தியாயம் 57

by damith
October 9, 2023 6:00 am 0 comment

உண்மையில் உயிருக்கு வடிவம் இல்லை. பரமாத்மாவே பல வடிவங்களில் உலவுகின்றார். உயிர் உணர்வு என்னும் கற்பனை, மாயையில் இருக்கும் வரை தனது சக்தி, சாமர்த்தியம் துச்சமாகத் தான் இருக்கும். கடவுள் மீது நாம் கொள்ளும் பக்தியினால் தான் எச்செயலும் பெருமை மிக்கதாக உணரப்படும் ஒரு புழு பரிணாம வளர்ச்சியடைந்து ஒரு வண்டாக மாறும் வரை பல தடைகளை, இடைஞ்சல்களை சந்திக்க வேண்டி இருக்கும். ஆரம்பத்தில் கடினமாகவும், இயலாது போல தோன்றினாலும் இறுதியில் வளர்ச்சி என்பதை அடைந்தே தீரும். ஆரம்பத்தில் அந்தப் புழுவானது சுயநலம். மோகம் போன்ற மாயவலையில் சிக்கிக் கொண்டிருக்கும்.

அந்த மாயவலையிலிருந்து விடுபட்ட பின் தான் அந்தப் புழு வண்டாக உருமாறும். அது போல் மனிதனும் தன் அஹம் பாவத்தை விட்டுவிட்டு சாத்திய வழியில் தொடர்ந்து பயணித்தால் கடவுளின் அனுக்கிரஹம் பெறலாம். ஆரம்பக் கட்டத்தில் குறுகிய எண்ணத்துடன் இருக்கும் மனம் அஹங்காரத்தை. அதனை விட்டுவிடும் போது மனம் விசாலமடைந்து சர்வ சக்தி படைத்தவனாக மனிதன் மாறி விடுகிறான். பின் மனிதன் தன்னுள் தெய்வீகத் தன்மையைக் காண்கிறான். உயிரணுக்கள் விஸ்தாரமடைந்து அஹம் ப்ரஹ்மா- நானே கடவுள் என்ற நிலையில் சக்தி பெறுகிறான்.

உலகத்தில் சுகம், வளம் யாவற்றையும் வழங்கவல்ல இறைவவன் மீது பக்திக் கொண்டு தெய்வீக வழி சென்று தெய்வீக ஆற்றல் பெறும் போது வாழ்க்கை வளமாகும் என்பது திண்ணமே.

ஒவ்வொரு நிகழ்வுகளிலும் உன்னை நீயே உணர்ந்து கொள். ஆத்மசக்தி அடையும் நேரம் வந்ததும், கடவுளை அறிவது எளிதாகி விடும். இறைவனை அடையும் நேரம் ஏற்படும். அதே ஆனந்தம் நம்பிக்கையுடன் ஒரு செயலில் இறங்கும் போதும் ஏற்படும்.

தன்னிடம் மறைந்துள்ள சக்தியை உணராமல் ஒருவன் சக்திமான் ஆக முடியாது. எவன் ஒருவன் தன்னை உணர்கிறானோ, தன் சக்தியை வெளிப்படும் முயற்சியில் தொடர்கிறானோ அவன். தான் நினைத்தப்படி அதுவாகவே மாறிவிடுவான். சித்திகளில் எல்லாம் மிக உயர்ந்தது தன்னை உணர்வதே ஆகும்.

லட்சத்தில் ஒரு சிலரே தன்னை உணர முற்படுவர். அவர்களில் ஒரு சிலரே தொடர் முயற்சியில் ஈடுபடுவர். அவர்களில் ஒரு சிலரே கடவுளை அடைவர் மனித உடலிருந்து பிறப் பெடுத்தவர்களில் ஒரு சிலரே ஆத்மாவை உணர்ந்துள்ளனர்.

மனிதன் உடலில் காமம், கோபம், மோகம், சந்தோஷம். தண்டனை. தயவு. தாட்சன்யம் ஆகிய அனைத்து உணர்வுகளும் உள்ளன. அவைகளே ஆனந்தத்திற்கு காரணமாகவும் அந்த ஆனந்தத்தை பெறுவதில் ஏற்படும் தடைகளாகவும் எதிரும் புதிருமாக விளங்குகின்றன. அனைவருக்கும் ஆனந்தம் அடிப்படை, ஆனந்தமே லட்சியம். லட்சியத்தை அடைவது என்பது ஆத்மாவிலேயே அடங்கியுள்ளது. எவன் ஒருவன் ஆத்மா வழி நடந்து தன் ஆத்மாவை பகுத்து அறிகிறானோ அவன் தான் நினைத்ததை நினைத்தப்படி அடைந்து விடுவான். பரமாத்மாவின் அம்சமே ஆத்மா. எனவே ஆத்ம ஞானம் (தன்னை அறிதல்) அடைந்தவனுக்கு கடவுளை அடைவது மிக எளிதாகி விடும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT