Friday, March 29, 2024
Home » Coke Kottu Beat Party மூலம் இலங்கை சுவை அனுபவத்தை உலகளாவிய ‘Coke is Cooking’ இல் இணைத்தல்

Coke Kottu Beat Party மூலம் இலங்கை சுவை அனுபவத்தை உலகளாவிய ‘Coke is Cooking’ இல் இணைத்தல்

by Rizwan Segu Mohideen
September 25, 2023 3:19 pm 0 comment

இலங்கையின் உற்சாகமான கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு மத்தியில், அண்மைக்காலமாக ஒரு நிகழ்வு குறிப்பாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்வுதான் அசத்தலான ‘Coke Kottu Beat Party’. இது Coca-Cola நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற ஒரு நடவடிக்கையான “Coke is Cooking” மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இலங்கையின் சமையல் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் போற்றும்  இந்த நிகழ்வு, உள்ளூர் சமூக ஊடகங்களில் வைரலாக மாறி, நாடு முழுவதும் ஒரு முக்கிய பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.

Coca-Cola நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, மறக்கமுடியாத அனுபவங்களை உருவாக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்ட சுவை மற்றும் பொழுதுபோக்கின் ஒரு அங்கமாகும். இது நிகழ்வு ஏற்கனவே கம்பஹா, நீர்கொழும்பு, குருநாகல், மாத்தறை, வரக்காபொலை மற்றும் கண்டி ஆகிய ஆறு முக்கிய இடங்களில் நடைபெற்றுள்ளது, இதில் கலந்து கொண்ட 125,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் இதயத்தில் அருமையான இலங்கை உணவாககொத்துஉள்ளது. இது அனைத்து சுவைகளுக்கும் ஏற்ற தலைசிறந்த ஒரு சமையல் படைப்பாகும். இந்த நிகழ்வில், ஒவ்வொரு பகுதியின் தனித்துவமான சமையல் பாணியையும் பிரதிபலிக்கும் பல்வேறு வகையான கொத்து உணவுகள் தயாரிக்கப்பட்டன.

கொத்து உணவை அனுபவிப்பதோடு நின்றுவிடாமல், Coca-Cola Kottu Beat Party இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்சிகளையும் இணைக்கிறது. Wasthi, Dinesh & Kaizer, Kanchana Anuradhi, CENTIGRADZ, Lahiru Perera, Hana Shafa, Aditya Weliwatta, Ashanya Premadasa, Bachi Susan, Ravi Royster மற்றும் Hot Chocolate, Ants மற்றும் Midlane போன்ற உணர்ச்சிபூர்வமான இசைக்குழுக்கள் தங்கள் இசை நிகழ்ச்சிகளுடன் இலங்கையைச் சுற்றி வலம் வருகின்றன.

நிகழ்வின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு “Kottu Battle” ஆகும், இதில் திறமையான கொத்து தயாரிப்பாளர்கள் சிறந்த கொத்து தயாரிப்பாளர் என்ற பட்டத்திற்காக போட்டியிடுகின்றனர். இந்த போட்டி வெறும் சமையல் திறமையைப் பற்றியது மட்டுமல்ல; இந்த உணவைத் தயாரிப்பதில் செலுத்தும் ஆர்வம் மற்றும் கலைத்திறனுக்கு இது ஒரு சான்றாகும். சமையல் நிபுணர்கள் தங்கள் திறமைகளை முன்னிலைப்படுத்தி, தங்கள் படைப்பாற்றல் மற்றும் சமையல் திறமையை வெளிப்படுத்துகிறார்கள்.

Coca-Cola நிறுவனத்தின் இலங்கை கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு இந்த நிகழ்வின் மூலம் பிரகாசமாக வெளிப்படுகிறது. Coca-Cola Kottu Beat Party எல்லைகளைத் தாண்டி, உணவு, இசை மற்றும் ஒற்றுமைக்கான பகிர்ந்த அன்பில் மகிழ்ச்சியுடன் இருக்க மக்களை ஒன்றிணைக்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT