எல்பிட்டியவில் இனந்தெரியாதோரால் கடை தீக்கிரை (CCTV) | தினகரன்

எல்பிட்டியவில் இனந்தெரியாதோரால் கடை தீக்கிரை (CCTV)

 
காலி, எல்பிட்டிய பகுதியிலுள்ள, வர்த்தக நிலையம் ஒன்று இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
 
இன்று (21) அதிகாலை 1.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த சம்பவம் தொடர்பில் CCTV காட்சிகள் பதிவாகியுள்ளன.
 
 
 
அதில், நபர் ஒருவர் எரிபொருள் நிரப்பிய போத்தல் ஒன்றுடன் வருவது,  பின்னர் கடைக்கு தீ மூட்டுதல் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
குறித்த சம்பவம் காரணமாக வர்த்தக நிலையத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளரான பேருவளையைச் சேர்ந்த இர்ஷாத் தெரிவித்தார்.
 
 
அது தொடர்பான காட்சிகள்...
 
 
 

Add new comment

Or log in with...