களுவாஞ்சிக்குடியில் விபத்து; 4 பேர் படுகாயம் | தினகரன்

களுவாஞ்சிக்குடியில் விபத்து; 4 பேர் படுகாயம்

 
களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இன்று (19) நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்வாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தானர்.
 
களுவாஞ்சிக்குடி விஷ்ணு ஆலயத்திற்கு முன்னால் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
 
 
கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
 
இதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ரகுநாதன் (27), கவிதா (27) மற்றும் அவர்களது இரண்டரை வயது மகள் ரசிக்கா ஆகியோர் படுகாயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற யதுசன் (19) என்பவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
 
 
இவ்விபத்துச் சம்பவர் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மிக அண்மைக்காலமாக இப்பகுதியில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமையால் பிரயாணிகள் அவதானமாக போக்குவரத்துக்களில் ஈடுபடுமாறு பொலிசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
(பெரியபோரதீவு தினகரன் நிருபர் - வ.சக்திவேல்)
 
 
 

Add new comment

Or log in with...