மட்டு. கல்லடி கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு | தினகரன்

மட்டு. கல்லடி கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு

 
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி கடற்கரையோரத்தில்  45 வயது மதிக்கத்தக்க நபரொருவரின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.
 
குறித்த சடலம், இன்று (16) அதிகாலை மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பீ. வெதகெதர தெரிவித்தார்.
 
கல்லடி சரவணா வீதி மாநகர சபை சுற்றுலாப் பூங்காவிற்கு முன்னாலுள்ள கடற்கரை பகுதியில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் 45 வயது மதிக்கத்தக்க இளைஞருடையது எனத் தெரியவருகிறது.
 
 
குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு திடீர்மரண விசாரணை அதிகாரி எஸ். கணேசதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
 
காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
குறித்த பகுதியில் கடந்த 10 ஆம் திகதி, 81 வயது மூதாட்டி ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
(ரீ.எல். ஜவ்பர்கான் - மட்டக்களப்பு குறூப் நிருபர்)
 
 

Add new comment

Or log in with...