பளையில் பொலிசார் மீது சூடு; இராணுவம் குவிப்பு | தினகரன்

பளையில் பொலிசார் மீது சூடு; இராணுவம் குவிப்பு

 
கிளிநொச்சியின் புற நகர்ப் பகுதியில் இன்று (19) அதிகாலையில் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது
 
இன்று (19) அதிகாலை பளை பளை கச்சார் வெளி சந்திப் பகுதியில் கடமையில் இருந்த 119 பொலிஸ் ரோந்து வாகனம் மீது இத்தூப்பாக்கி பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
 
இதன் போது பளை பொலிஸார் அங்கு கடமையில் இருந்துள்ளனர்.
 
குறித்த சம்பவம் இன்று (19) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றதுடன் அப்பகுதியில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 
தோட்டாக்கள் அனைத்தும் புகையிரதத்திற்கான சமிஞ்ஞை கட்டுப்பாட்டு பெட்டியை துளைத்துள்ள போதிலும் பொலிஸாரின் வாகனத்தின் மீது ஒரு தோட்டா மாத்திரம் பாய்ந்துள்ளது.
 
 
குறித்த பகுதியில் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டதோடு, தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இதன்போது, வீடுகளை விட்டு வெளியேற வேண்டாமென ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் மக்களுக்கு அறிவித்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
 
இச்சம்பவத்தில் எவரும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இனந்தெரியாத நபர்களால் மறைவான இடமொன்றிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் வாகனத்திற்கு சிறு சேதம் ஏற்பட்டதோடு இரு பொலிசாரும் படுகாயமடைந்துள்ளனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான், யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)
 
 

Add new comment

Or log in with...