இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 58 பேர் வைத்தியசாலையில் | தினகரன்

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 58 பேர் வைத்தியசாலையில்

 
அகுரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அகுரஸ்ஸ - காலி வீதியில் கியாடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 58 பேர் காயமடைந்துள்ளனர். 
 
இதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்
 
இன்று (19) காலை 8.10 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான  பஸ் ஒன்றும், தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏட்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த விபத்தில் இரு பஸ்களிலும் பயணித்த 52 பேர் காயமடைந்த நிலையில் அகுரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு,  பாரிய காயங்களுக்குள்ளான 6 பேர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இவ்விபத்தில் 21 ஆண்களும் 31 பெண்களும் காயமடைந்துள்ளதோடு, அதில் இரு பஸ்களின் சாரதிகளும் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அகுரஸ்ஸ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

There is 1 Comment

Very dangerous

Pages

Add new comment

Or log in with...