வெள்ளவத்தையில் கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிவு (CCTV) | தினகரன்

வெள்ளவத்தையில் கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிவு (CCTV)

 
 
(பட உதவி: டைம் தமிழ் டொட் கொம்)
 
குறித்த கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 21 பேர் காயமடைந்துள்ளதோடு, அவர்களில் 14 பேர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சம்பவத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
சலிமண்ட் வீதியில் அமைந்துள்ள குறித்த கட்டடம், ஒரு திருமண மண்டபத்திற்குரியது எனவும், ஏற்கனவே கட்டப்பட்ட திருமண மண்டபத்தின் பிற்பகுதியை, காரியாலய உபயோகத்திற்காக விஸ்தரிக்கும் நோக்கில் புதிதாக கட்டப்பட்டு வந்த நிலையில், அக்கட்டடம் இடிந்து வீழ்ந்துள்ளது.
 
குறித்த கட்டடத்திற்கு பின்னால் கால்வாய் ஒன்றும் உள்ளமையானது அதன் ஸ்திரத்தன்மைக்கு சவாலாக அமைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இது தொடர்பான ஆய்வுகள் மற்றும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

 
பலருக்கு காயம்; மீட்பு பணி தொடர்கிறது
 
வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகில் கட்டப்பட்டு வந்த 5 மாடிக் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது.
 
 
 
குறித்த சம்பவத்தில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
 
குறித்த பகுதியில் பொலிசார் மற்றும், தீயணைப்பு படையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

Add new comment

Or log in with...