Tuesday, May 16, 2017 - 12:04
இன்றைய தினம் (16) ஐ.ம.சு.மு. உறுப்பினர் சுசில் குணரத்ன போக்குவரத்து, விளையாட்டு, இளைஞர் விவகாரம், கூட்டுறவு, வர்த்தகம், உணவு மற்றம் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு பதவியை வட மத்திய மாகாண சபை ஆளுநர் பீ.பி. திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அருகில் வட மாகாண சபை முதலமைச்சர் எஸ்.எம். பேசல ஜயரத்ன பண்டாரவும் காணப்படுகின்றார்.
- எதிர்கட்சித் தலைவர் அனில் ரத்நாயக்க

௬ட்டு எதிர்கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் வடமத்திய மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மேற்கொள்ளும் நடவடிக்கை சம்பந்தமாக ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர்கள் நேற்று (15) கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
மாகாண சபையின் அதிகாரத்தை கவிழ்த்து ௬ட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒரு போதும் நாம் இடமளிக்கமாட்டோம்.
இது அவர்களின் அரசியல் தந்திரமாகும். மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன பண்டார எம்மை விட அவருக்கு இப்போது விரோதமாக இருப்பவர்களுக்குதான் உதவி செய்தார். எமது தேவைகளை கோரிக்கைகளை விட ௬ட்டு எதிரணியினரின் கோரிக்கைகளையும் தேவைகளையும் நிறைவேற்றினார்.
இந்நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வர ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளித்து பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியது ஆயினும் இதன்போது முதலமைச்சர் பேசல ஜயரத்ன பண்டார எம்முடன் இணைந்து செயல்படவில்லை.
என்றாலும் நல்லாட்சி அரசுக்கு விரோதமான முறையில் இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒரு போதும் இடமளிக்கவோ ஆதரவளிக்கவோ மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (15) வட மத்திய மாகாண சபையின் ஐ.ம.சு.மு. உறுப்பினர், எஸ்.எம். ரஞ்சித், தனது மாகாண சபை அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார்.
இதனையடுத்து, மாகாண சபையைச் சேர்ந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு, ஐ.ம.சு.மு. ஆளும்கட்சி உறுப்பினர்கள் 17 பேர் இணைந்து, தற்போதைய முதலமைச்சர் எஸ்.எம். பேசல ஜயரத்ன பண்டாரவிற்கு பதிலாக எஸ்.எம். ரஞ்சித்தை முலமைச்சராக மாற்றுமாறு கையெழுத்திட்ட சத்தியக்கடதாசி ஒன்றை ஆளுநரிடம் கையளித்திருந்ததோடு, அது பின்னர் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வட மத்திய மாகாண சபையில் 33 உறுப்பினர்கள் உள்ளதோடு, அதில் 22 ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.
இதேவேளை, நேற்று (15) இராஜினாமா செய்த மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம். ரஞ்சித்தின் அமைச்சு பதவிக்கு, இன்றைய தினம் (16) ஐ.ம.சு.மு. உறுப்பினர் சுசில் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் (16) வட மத்திய மாகாண சபை ஆளுநர் பீ.பி. திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம். ரஞ்சித், போக்குவரத்து, விளையாட்டு, இளைஞர் விவகாரம், கூட்டுறவு, வர்த்தகம், உணவு மற்றம் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(கல்நேவ தினகரன் விசேட நிருபர் - டப்ளியூ.எம். பைசல்)
Add new comment