வட கொரியா சோதித்த ஏவுகணை புதிய வகை | தினகரன்

வட கொரியா சோதித்த ஏவுகணை புதிய வகை

வட கொரியா கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதித்த ஏவுகணை புதிய வகையைச் சேர்ந்தது என்றும் பெரிய அணு குண்டை ஏந்திச் செல்லும் திறன் கொண்டது என்றும் அந்த நாடு குறிப்பிட்டுள்ளது.

செங்குத்தான கோணத்தில் ஏவப்பட்ட ஏவுகணை 2,000 கிலோமீற்றர் மேலெழுந்து சுமார் 700 கிலோமீற்றர்கள் சென்று மேற்கு ஜப்பான் கடலில் விழுந்தது.

புதிதாக மேம்படுத்திய தொலைதூரம் செல்லும் ஏவுகணை ஒன்றையே சோதித்ததாக வட கொரியா நேற்று அறிவித்தது. எனினும் வட கொரியாவின் இந்த அறிவிப்பை இன்னும் உறுதி செய்ய முடியாதிருப்பதாக தென் கொரியா குறிப்பிட்டது.

எனினும் வட கொரியாவின் ஏவுகணை வளிமண்டலத்தை விட்டு வெளியேறி மீண்டும் நுழைய முடியுமாகி இருப்பது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை மேம்படுத்துவதற்கு முக்கியமான ஒரு அம்சம் என்று தென் கொரிய செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

வட கொரியா இந்த ஆண்டில் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்ட போதும் அவை அனைத்தும் வெற்றி அளிக்கவில்லை. எனினும் இது ஐ.நா தடையை மீறும் செயல் என்பதோடு சர்வதேச அளவில் கோபத்தையும் அமெரிக்காவுடான பதற்றத்தை அதிகரித்துமுள்ளது. 


Add new comment

Or log in with...