ஐவரிகோஸ்ட் இராணுவம் நகரை முடக்கி கலகம் | தினகரன்

ஐவரிகோஸ்ட் இராணுவம் நகரை முடக்கி கலகம்

ஐவரிகோஸ்டில் கலகம் நடத்தும் படை வீரர்கள் கடந்த மூன்று நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சட்ட ஒழுங்கை மீளக் கொண்டுவரும் படை நடவடிக்கை ஒன்றை இராணுவம் ஆரம்பித்துள்ளது.

சம்பள பிரச்சினை காரணமாக பல நகர வீதிகளை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கும் வீரர்கள் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரான பவ்வாகேவை முடக்கியுள்ளனர்.

இராணுவம் தலையிட்டால் போராடத் தயாராக இருப்பதாக கலகத்தில் ஈடுபட்டுள்ள படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் படையினரின் செல்வாக்கு அதிகரித்திருப்பதோடு அதன் உச்சகட்டமாகவே பவ்வாகே நகரில் அந்த படையினரின் அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது.

கலகத்தில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு எதிராக இராணுவம் பவ்வாகே நகரை நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளது.

கலகத்தில் ஈடுபட்டிக்கு வீரர்கள் கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவர தலா 8000 டொலர் மேலதிக கொடுப்பனவை தரும்படி கடந்த ஜனவரியில் கோரி இருந்தனர். 


Add new comment

Or log in with...