மொன்ஸ்டஸ் அணி வெற்றி வாகை சூடியது | தினகரன்

மொன்ஸ்டஸ் அணி வெற்றி வாகை சூடியது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரண்டாவது பிரிமியர் லீக் மென் பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டியில் -2017 இல் பெற்றி மொன்ஸ்டஸ் அணியினர் 32 ஓட்டங்களால் மெரூண் ரைடர்ஸ் அணியினரை வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவாகினர்.

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் நலன்புரிச் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த 6 ஓவர் கொண்ட 5 அணிகள் பங்குபற்றிய சுற்றுப் போட்டி அண்மையில் மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெற்றது.

பெற்றி பயிற்றஸ், றெட் ரொக்ஸ், வெற்றி மொன்சஸ், மரூண் ரைடர்ஸ் மற்றும் சுப்பர் இலவன் அணிகள் மோதியிதில் இறுதிப் போட்டிக்குத் மட்டக்களப்பு மொன்ஸடஸ் அணியினரும் மெரூண் ரைடர்ஸ் அணியினரும் தெரிவாகினர்.

நாணயச் சுழற்சியின் வெற்றி பெற்ற மட்டக்களப்பு மொன்ஸடஸ் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 6 விக்ெகட் இழப்பிற்கு 76 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு 77 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மெரூண் ரைடர்ஸ் அணியினர் 8 விக்கெட் இழப்பிற்கு 44 ஓட்டங்களைப் பெற்றனர்.

சுற்றுப்போட்டியின் ஆட்ட நாயகனாக 4 விக்கட்டுக்களையும் 36 ஓட்டங்களையும் பெற்ற வெற்றி மொன்ஸ்டஸ் அணியைச் சேர்ந்த பி. பங்கேஸ்வரன் தெரிவானார். 10 விக்கட்டக்களையும் 78 ஓட்டங்களையும் பெற்ற ரெட் ரொக்ஸ் அணியினைச் சேர்ந்த எஸ்.மகீரன் தொடராட்ட நாயகனாகவும்இ 10 விக்கெட்டுக்களையும் 70 ஓட்டங்களையும் பெற்று சிறந்த பந்து வீச்சாளராக வெற்றி பயிற்றஸ் அணியைச் சேர்ந்த எம்.பவிராஜ் மற்றும் 86 ஓட்டங்களைப் பெற்று சிறந்த துடுப்பாட்டக்காரராக மெரூண் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த ரி. மேனகாந்தும் தெரிவாகினர்.

தாதியர் நலன்புரிச் சங்கத்தினர் தலைவர் பி.புஸ்பராஜா,செயலாளர் ஆர். ஜெயக்குமார், இணைப்பாளர் வைத்தியக் கலாநிதி எஸ்.சுஜேந்திரன், தாதிய முகாமையாளர் என். சுசிகரன் மற்றும் திருமதி ஏ. டபிள்யு. என். அபயக்கோன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கான சம்பியன் கிண்ணம் மற்றும் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

மட்டக்களப்பு விசேட நிருபர் 

 


Add new comment

Or log in with...