தென்ஆபிரிக்கா கிரிக்கெட் சபையின் ஐந்து விருதுகளை தட்டிச் சென்றார் டி காக் | தினகரன்

தென்ஆபிரிக்கா கிரிக்கெட் சபையின் ஐந்து விருதுகளை தட்டிச் சென்றார் டி காக்

தென்ஆபிரிக்கா அணியின் விக்கெட் காப்பாளர் குயின்டான் டி காக் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் உட்பட ஐந்து விருதுகளை தட்டிச்சென்று அசத்தியுள்ளார்.

தென்ஆபிரிக்கா கிரிக்கெட் சபை சார்பில் சிறந்த வீரர்களுக்கான விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இதில் விக்கெட் கீப்பரான குயின்டான் டி காக் இந்த வருடத்திற்கான சிறந்த வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், வீரர்களின் சிறந்த வீரர், ரசிகர்களின் சிறந்த வீரர் என ஐந்து விருதுகளை தட்டிச் சென்றார்.

கடந்த வருடம் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா 6 விருதுகளை தட்டிச் சென்றார். தற்போது டி காக் ஐந்துகளை பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 178 ஓட்டங்கள் அடித்ததற்காகவும், ஹோபர்ட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததற்காகவும் டி காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக இம்ரான் தாஹிர் செய்யப்பட்டுள்ளார். இவர் நியூசிலாந்துக்கு எதிராக 24 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியிருந்தார். 


Add new comment

Or log in with...